வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பேளூரில் அஷ்டபுஜ பால மதன கோபாலசுவாமி கோவிலில், கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காலை, 10:00 மணியளவில், சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை திருவீதி உலா நடந்தது. வாழப்பாடி, பேளூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை, 9:00 மணிக்கு மேல், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.