பதிவு செய்த நாள்
28
மே
2018
03:05
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சிறப்பு ேஹாமம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி முதல் நேற்று 27ம் தேதி வரை 108 யாக குண்டங்கள் அமைத்து, காலை மற்றும் மாலை நேரங்களில் நரசிம்ம சுதர்சன மந்திரங்கள் முழங்க ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, நேற்று சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை மூலவருக்கு அபிேஷகமும், காலை 7:00 மணிக்கு மூலவர் லட்சுமி நரசிம்மர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, காலை 8:00 மணிக்கு கோவிலில் இருந்து, யாகசாலைக்கு உற்சவர் புறப்பாடு நடந்தது. அங்கு, தேன், நெய், பட்டு, பழ வகைகள், மூலிகைகளால் ேஹாமம் நடந்தது. பின், காலை 10:30 மணிக்கு வசுந்தரா ேஹாமமும், 11:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் நடந்தது. பின்னர், யாக சாலையில் இருந்து உற்சவர் மற்றும் கலச புறப்பாட்டு கோவிலுக்கு சென்றது. பகல் 11:50 மணிக்கு மூலவர் அபிேஷகம் மற்றும் 12:00 மணிக்கு உற்சவர் அபிேஷகம் நடந்தது. இதில், நான்கு வேதங்கள் மற்றும் 4,000 திவ்ய பிரபந்தியங்கள் பாராயணம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மணி, அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.