பதிவு செய்த நாள்
28
மே
2018
03:05
ஆத்தூர்: நத்தக்கரை, செல்வ மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. தலைவாசல் அருகே, நத்தக்கரை கிராமத்தில், பழமை வாய்ந்த செல்வ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 24ல், சக்தி அழைத்தலுடன் வைகாசி தேர்த்திருவிழா துவங்கியது. நேற்று மதியம், 3:00 மணியளவில், 40 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். மாலை, 6:00 மணியளவில், தேர் கோவிலை வந்தடைந்தது. தலைவாசல், நத்தக்கரை சுற்றுவட்டார பகுதி மக்கள், வழிபாடு செய்தனர். இன்று மாலை, 3:00 மணியளவில், மஞ்சள் நீராடுதல் விழாவுடன் நிறைவடைகிறது.