பதிவு செய்த நாள்
28
மே
2018
03:05
அரூர்: அரூரில், உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி, நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள, வர்ணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. நந்திக்கு, பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபி?ஷகங்கள் நடந்தன. இதேபோல், அரூர் சந்தைமேட்டில் உள்ள, வாணீஸ்வரர் கோவிலில், சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.