பதிவு செய்த நாள்
28
மே
2018 
03:05
 
 புதுச்சேரி: குரு சித்தானந்தா சுவாமிகள் 181ம் ஆண்டு குரு பூஜை விழா, நாளை(28ம் தேதி) கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமிகள் 181ம் ஆண்டு குரு பூஜை விழா நாளை,மாலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு குறிஞ்சிப்பாடி கம்பன் வைத்தியநாதன் தலைமையில், மீனாட்சி திருக்கல்யாணம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவும், இரவு 7.30 மணிக்கு ரமணா கலைக் குழுவின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடக்கிறது. இரண்டாம் நாளான 29ம் தேதி காலை 6.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், ருத்ர ஜபத்துடன் குரு சித்தானந்தா சுவாமிகள் குரு பூஜை விழா துவங்குகிறது. காலை 7.00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், 9.00 மணிக்கு பூர்ணாஹூதி, 9.30 மணிக்கு கலச புறப்பாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 10.00 மணிக்கு சுவாமிகளுக்கு கலசாபிஷேகம், 10.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 10.45 மணிக்கு 7,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 10.45 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர், நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.