ராஜபாளையம் : ராஜபாளையம் சம்மந்தபுரம் ஸ்ரீ ராமசுவாமிகோயிலில் மஹாகும்பாபிஷேகம் நடந்தது. 114 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விழாவையொட்டி, மே 25 முதல் யாகசாலை பூஜை துவங்கின. நேற்று முன்தினம் காலை 11:05 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர், உற்சவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. மாலையில்சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் துரைராஜா, நிர்வாக அறங்காவலர் சகாதேவராஜா செய்தனர்.