வத்திராயிருப்பு முருகன் கோயில்களில் விசாகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2018 12:05
வத்திராயிருப்பு : வைகாசி விசாகதினத்தை முன்னிட்டு வத்திராயிருப்பு பகுதி முருகன் கோயில்கள் விழாக்கோலம் பூண்டது. வத்திராயிருப்புகாசிவிஸ்நாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கும், மற்றொரு சன்னதியில் எழுந்தருளிய ஆறுமுகப்பெருமானுக்கும் காலையில் 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சஷ்டிப்பாராயணம் செய்து வழிபாடு செய்தனர். பின்னர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியசுவாமிக்கு பன்முக தீபாராதனை வழிபாடு நடந்தது. மாலையில் சுவாமி தேவியர்களுடன் வீதியுலா நடந்தது. கூமாப்பட்டிபாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி வழிபாடு நடந்தது. மலர்களால் பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. எஸ்.ராமச்சந்திரபுரம்பழனியாண்டவர் கோயிலில் காலையில் பூரணகும்பம் வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. உச்சிகால பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.