திருப்புவனம் : திருப்புவனம் சுப்ரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 9:00 மணிக்கு புஷ்பவனேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து சுப்ரமணியசுவாமி கோயிலை வந்தடைந்தது. அதன் பின் அபிஷேகம் நடந்தது. மாலை நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது.