பதிவு செய்த நாள்
29
மே
2018
02:05
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம், நேற்று நிறைவடைவதை முன்னிட்டு, கடந்த, 26ல், கணபதி பூஜையுடன், 1,008 கலச பூஜை, நேற்று முன்தினம் காலை, இரண்டாவது கால கலச பூஜை, மாலை, 6:30 மணிக்கு, மூன்றாவது கால கலச பூஜை நடந்தன.நேற்று காலை, 7:00 மணிக்கு நான்காவது கால கலச பூஜை நடந்தது. அருணாசலேஸ்வரருக்கு, யாகசாலையில் வைக்கப்பட்ட கலசபுனித நீரால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது. தொடர்ந்து, இரவு சுவாமி வீதியுலா நடந்தது.