பதிவு செய்த நாள்
17
ஜன
2012
12:01
தென்காசி : தென்காசி பகுதியில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. தென்காசி பகுதியிலும் மாட்டுப் பொங்கல் சிறப்பாகவே கொண்டாடப்பட்டது. நேற்று காலையில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களின் மாடுகளை நீர் நிலைகளுக்கு அழைத்து சென்றனர். அங்கு மாடுகளை குளிக்க வைத்து அவற்றின் உடலில் வண்ண மையினால் வர்ணங்களை தீட்டினர். மேலும் மாட்டு கொம்புகளில் வர்ணம் பூசி, வண்ண கற்றாழை நாரை கட்டி அலங்கரித்தனர். பின்னர் மாட்டு தொழுவங்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு கொடுத்தனர். தென்காசி, இலஞ்சி, மேலகரம், குற்றாலம், நன்னகரம், காசிமேஜர்புரம், குடியிருப்பு, வல்லம், கொட்டாகுளம், பிரானூர், தெற்குமேடு, புளியரை, கற்குடி, புதூர், கட்டளைக்குடியிருப்பு, விசுவநாதபுரம், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வாவாநகரம், இலத்தூர், சீவநல்லூர், கொடிக்குறிச்சி, இடைகால், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, கணக்கப்பிள்ளைவலசை, குத்துக்கல்வலசை, பெரியபிள்ளைவலசை, சுந்தரபாண்டியபுரம், திருச்சிற்றம்பலம், பாட்டாக்குறிச்சி, மத்தளம்பாறை, புல்லுக்காட்டுவலசை, திரவியநகர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மாட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். மாடுகளுக்கு ராஜ உபசாரம் நடந்தது.