பதிவு செய்த நாள்
17
ஜன
2012
12:01
ஆழ்வார்குறிச்சி : கடையம் வட்டார கோயில்களில் பொங்கல் சிறப்பு வழிபாடு நடந்தது. சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று காலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. விழாவில் சுற்றுவட்டார மக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆழ்வார்குறிச்சி வரம்தரும் விநாயகர், பாலவிநாயகர், சக்திவிநாயகர், முப்புடாதியம்மன் கோயில்கள், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், சாலை இசக்கியம்மன் கோயில், சுடலைமாடசாமி கோயில், கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில், கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயில் உட்பட சுற்று வட்டார கோயில்களில் பொங்கல் திருநாளன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடந்தது.