தேவகோட்டை : தேவகோட்டை ரங்கநாதர் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா நடந்தது. திண்ணப்பன் தலைமையில் காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற தலைப்பில் தலைமையாசிரியர் சீனிவாசன் பேசினார். அதனை தொடர்ந்து ரங்கநாதர் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. மாலையில் நடந்த இலக்கிய விழாவிற்கு மெய்யப்பன் தலைமை வகித்தார். இலக்கிய பேச்சாளர் நாஞ்சில்சம்பத் தலைமையில் சொற்போர் நடந்தது. அறங்காவலர் குட்டயன் செட்டியார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.