முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே ராமலிங்கபுரம், குமாரகுறிச்சி, எருதங்குளம் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட எருதாருடைய அய்யனார் கோயில், தட்சணாமூர்த்தி, காளியம்மன், விநாயகர், நந்திதேவர் கோயில்களில் ஆறு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டது. கோயில்களில் புனித கங்கை நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கபட்டது. மக்கள் பொழுதுபோக்கிற்காக பூங்கா அமைக்கப்படும் என திருப்பணி கமிட்டி தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார். வருஷாபிஷேகத்தில் குமாரகுறிச்சி, எருதங்குளம், ராமலிங்கபுரம் கிராம திருப்பணி குழுவினர், கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.