உசிலம்பட்டி, எழுமலை அருகே இ.கோட்டைப்பட்டி மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் வைகாசி திருவிழா துவங்கியது. அம்மனுக்குகரகம் எடுத்தல் உத்தப்புரம் விநாயகர் கோயில் அருகில் துவங்கியது. கரகம் நிற்காமல் வர வேண்டியும், நேர்த்திக்கடன் செலுத்தவும், உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட பக்தர்கள் இ.கோட்டைப்பட்டி கோயிலுக்கு வந்தனர்.