சோழவந்தான், திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலில் காலை சிறப்பு பூஜைக்கு பின் பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடாகி வைகை ஆற்றில் எழுந்தருளிதீர்த்தமாடினர். புனிதநீர் கொண்டுவரப்பட்டு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளஞ்செழியன் மற்றும்பலர் செய்திருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில் வைகாசி திருவிழா சிறப்பு வழிபாடு நடந்தது.