கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் குழந்தை வடிவில் இருபது திருக்கரங்களுடன் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் துர்க்கை தனிச்சன்னதி கொண்டுள்ளாள். மங்கள சண்டி என்று அழைக்கப்படும் இவளை வழிபட்டால் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.