பதிவு செய்த நாள்
31
மே
2018
12:05
குளித்தலை: குளித்தலை அடுத்த கூடலூர் பஞ்., உடையாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தீர்த்தக் குட ஊர்வலத்துக்குப் பின், மாரியம்மனுக்கு, 16 வகை திரவியங்களால், அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் கரகம் பாலித்தல், குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், தரம் குத்துதல், படுகளம் விழுதல், பொங்கல் வைத்து கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் விழாவில் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.