ராமநாதபுரம்: ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகவதியம்மன் கோயிலில் பூக்குழி பூச்சொரிதல் விழா நடந்தது. மே 20ல் காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. மாலையில் விளக்கு பூஜையும், மூலவருக்கு தினமும் அபிேஷக ஆராதனைகள் நடந்தது. நொச்சியூரணியில் இருந்து அக்னி சட்டி, வேல், மயில் காவடிகளுடன் பால்குடம் ஊர்வலம் நடந்தது. மாலையில் கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.