விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2018 06:05
விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் தேரில் வளம்வந்து பக்கர்களுக்கு அருள்பாலித்தனர்.
விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன்கோயில் பொங்கல்விழா மே 22 முதல் நடந்து வருகிறது. வெள்ளி ரிஷபம், தங்ககுதிரை வாகனங்கள் மற்றும் பல்லக்கில் அம்மன் தினம் வலம் வந்து, மண்டபங்களில் வீற்றிருந்து அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக, இன்று வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை(ஜூன் 1) மாலை 5:00 மணிக்கு தேர் சுவடு பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 2 மாலை 4:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி நகர் வலம் வர கொடியிறக்குதல் நடக்கும். ஜூன் 3 ல் அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வந்து, ஊஞ்சலில் வீற்றிருத்தல், இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் நகர்வலம் மற்றும் வாணவேடிக்கை நடைபெறுகிறது.