திருமலையில் புரட்டாசி தரிசனம்: இன்று முதல் ஈரோட்டில் டிக்கெட் வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2018 03:06
ஈரோடு: புரட்டாசி மாதத்துக்கான திருப்பதி திருமலை சேவா டிக்கெட், இன்று முதல் ஈரோட்டில் வழங்கப்படுகிறது. ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணைந்து தரிசன டிக்கெட் வழங்கும் மையம், ஈரோட்டில் செயல்படுகிறது. வரும் புரட்டாசி மாதம் அதாவது செப்டம்பர் மாதத்துக்கான சேவா டிக்கெட் இன்று முதல், ஈரோடு மையத்தில் வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்துக்கான தங்கும் வசதி மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வரும், 5 செவ்வாய் கிழமை வழங்கப்படுகிறது. இந்தாண்டு திருமலை ஏழுமலையான் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவம், செப்டம்பர், 13ல் துவங்கி, 21 வரை நடக்கிறது. பொதுமக்கள் நேரில் வந்து தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் வசதிக்கான டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.