மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி தசாவதார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா மே 21ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழா நடக்கும் பத்து நாட்களும் தினமும் காலை திருப்பல்லக்கு, இரவு பல்வேறு வாகனங்களில் பெருமாள் அருள்பாலித்தார். விழாவில் மே 31 தசாவதாரம் நடைபெற்றது. வராகம், மச்சவதாரம், கூர்மம், கள்ளழகர், முத்தங்கி, கிருஷ்ணர், மகாவிஷ்ணு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.