மேல்மருவத்துார்: சோத்துப்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள, சாய் பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. மேல்மருவத்துார் அருகில் உள்ள, சோத்துப்பாக்கம் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. சமீபத்தில் இந்த கோவிலை புதுப்பித்து, விநாயகர் மற்றும் சாய் பாபா சிலையும் வைக்கப்பட்டன. இக்கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவர், அன்பழகன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவில், பல கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.