பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
12:06
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் முத்தாலம்மன் கோவில் உள்ளிட்ட 7 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் ஆசூர் கிராமத்தில் விநாயகர், மாரியம்மன், துர்க்கையம்மன், பூரணி, பொற்கலை உடனுறை அய்யனாரப்பன், காளியம்மன், கங்கையம்மன், முத்தாலம்மன் ஆகிய கோவில்கள் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கபட்டது.
இதையடுத்து, கடந்த 31ம் தேதி மாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 7 .30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்றது, காலை 8.35 மணிக்கு கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை ஹோமம், பூஜைகளை புதுச்சேரி வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் வந்திருந்த குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், கிராம முக்கியஸ்தர்கள் செய்தனர். கும்பாபிஷேகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.