பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
12:06
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோவில் பகுதியில் உள்ள, திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று, துரியோதனன் படுகளம் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட ருத்திரான் கோவில் பகுதியில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 18 நாள் நடைபெறும் அக்னி வசந்த விழா, 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மஹாபாரத சொற்பொழிவு மற்றும் வில் வளைப்பு, அர்சுனன் தபசு, கர்ண மோட்சம் உள்ளிட்ட தலைப்புகளில் நாடகங்கள் நடந்தன. பிரதான விழாவான நேற்று, துரியோதனன் படுகளமும், இரவில், தீ மிதி விழாவும் விமரிசையாக நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.