பதிவு செய்த நாள்
06
ஜூன்
2018
11:06
நபிகள் நாயகத்திடம் அவரது தோழர், “உலகிலேயே மிகவும் உயர்வான செயல் எது?” என்று கேட்க, நாயகம் அதற்கு, “சரியான நேரத்தில் தொழுகை புரிவது” என்றார். இதற்கு அடுத்து உயர்ந்த செயல் எது?” என்றார் தோழர்.“தாயுடனும், தந்தையுடனும் பணிவான முறையில், அவர்களின் மனம் மகிழத்தக்க வகையில் நடந்து கொள்வது,” என்றார்.மற்றொருவர் நாயகத்திடம் கேட்டார். “அண்ணலாரே! தாய், தந்தை மீது பிள்ளைகளுக்கு என்ன உரிமை உள்ளது?” என்றார்.அதற்கு அண்ணல் நாயகம், “தாய், தந்தையே உமது சொர்க்கம். மேலும் அவர்களே உம்முடைய நரகமும் ஆவார்கள்,” என்றார்.இதன் பொருள் புரிகிறதா?தாய், தந்தைக்கு சேவை செய்பவன் சொர்க்கத்தை அடைகிறான். அவர்களை உதாசீனப்படுத்துபவன் நரகத்தை அடைகிறான் என்பதாகும்.குர்ஆனில் அல்லாஹ், “எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து,” என்கிறான்.பெற்றோர்களைப் பாதுகாப்பதன் அவசியம் இதிலிருந்து தெரிய வருகிறது.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி.