பதிவு செய்த நாள்
06
ஜூன்
2018
11:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ராமேஸ்வரம் கோ யிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால், 2013 மார்ச்சில் கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்லவும், கோயிலுக்குள் அலைபேசி எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல போலீசார் தடை விதித்து, தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர். இதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு படையினர், கோயில் பாதுகாப்பு மேம்படுத்துதல், சி.சி.’டிவி’கேமிரா பொருத்துதல் குறித்து கோயில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு தேசிய பாதுகாப்பு படை மேஜர் ஜெகநாதன் தலைமையில் 5 பேர் குழு வந்தனர்.இவர்கள் கோயில் மூன்றாம் பிரகாரம், மேல் தளம், சுவாமி, அம்மன் சன்னதி, நுழைவு வாயில் பாதுகாப்பு மற்றும் சி.சி.’டிவி’ கேமிரா செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்து கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.