நெகமம்: நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், ஐயப்பன் கோவில் ஆலய திருப்பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.பந்தள சாஸ்தா ஐயப்பன் பூஜா சங்கம் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில், நெகமம் - தளி ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், கோவில் திருப்பணி மேற்கொள்ள அடிக்கல் நாட்டப்பட்டது.நேற்று காலை, கோவில் திருப்பணிக்கான பூமிபூஜை, வாஸ்து பூஜை மற்றும் பாலக்கால் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.