பதிவு செய்த நாள்
06
ஜூன்
2018
12:06
நகரி: வீரபிரம்மேந்திரா சுவாமி கோவிலின், 5ம் ஆண்டு உற்சவ விழா நேற்று நடந்தது. சித்துார் மாவட்டம், நகரி, கரகண்டாபுரம் கிராமத்தில், கோவிந்தம்பா சமேத வீரபிரம்மேந்திரா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின், 5ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. மாலை, 3:30 மணிக்கு, திருக்கல்யாணம், மாலை, 6:00 மணிக்கு, உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவர் வீதியுலாவும், வாணவேடிக்கையும் நடைபெற்றது. விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிப்பட்டனர்.