பதிவு செய்த நாள்
07
ஜூன்
2018
12:06
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, முருக ப க்தர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள மலைக்கோவில்களில், 800 ஆண்டுகள் பழமையானது கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவில்.
முருகனின் பாதம்பட்ட இடத்தை , 14ம் நுாற்றாண்டில் இருந்து, கோவில் அமை த்து வ ழிபடுவதாக, மலைமேல் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. பெரியகளந்தை ஆதீஸ்வரன் கோவிலில் இருந்து வெள்ளிங்கிரி மலை செல்லும் வழியில், அருணகிரிநாதர் பொன்மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு, பாடல் பாடியதாக கூறுப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க வேலாயுதசுவாமி கோவில், புரவிபாளையம் ஜமீன் மேற்பார்வையில் இருந்தாலும், இந்து ச மயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சில ஆண்டுகளாக, மலையின் பின்பகுதியில் அமை க்கப்பட்ட பாதையில், போதிய பாதுகாப்பு இல்லாததால், குடிமகன்களின் நடமாட்டம் திகரித்துள்ளது.
போதை யில் மது பாட்டில்களை மலைப்பாதையிலேயே உடைத்து நாசப்படுத்தி வருகின்றனர். மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள், மலைக் கோவில் பாதையை பொதுக்கழிப்பிடமாகவும் மாற்றியுள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், மலைப்பாதை குண்டும் குழியுமாக உள்ளதால், பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். மலைக்கோவில் முன் மண்டப பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. கோவில் முன் பகுதியில் சுவர் அமைக்கும் பணி, முருக ப க்தர்களால், சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.
அறநிலையத்துறையினர் முழுஒத்துழைப்பு கொடுக்காததால்,சில அடி துாரத்துடன்சுவர் கட்டும் பணி நின்று விட்டது. இந்நிலையில், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை புதுப்பிக்க வேண்டும். கோவிலில் முன் மண்டபம் உள்ளிட்டு திருப்பணிகள் மேற்கொண்டு, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, முருக பக்தர்கள் அரசுக்கும், இந்து ச மய அறநிலையத்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். கோவிலில், க டந்த , 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தேசியநெடுஞ்சாலை நான்குவழிப்பாதை மற்றும் மேம்பாலபணிகள் நடப்பதால், தைப்பூச தேரோட்டமும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடந்து, 16 ஆண்டுகள் கடந்த நிலையில், திருப்பணிகளை நிறைவு செய்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.