பதிவு செய்த நாள்
07
ஜூன்
2018
12:06
சேலம்: சேலத்தில், ஷீரடி சாய் நண்பர்கள் குழு தலைவர் ஜெய்குமார், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மஹாராஷ்டிராவிலுள்ள ஷீரடியிலிருந்து, சாய்பாபாவின் பாதுகை, ஒன்பது நாணயங்கள், வரும், 10ல், சேலம், சாரதா கல்லூரி சாலை, தெய்வீகம் மண்டபத்துக்கு, தரிசனத்துக்கு கொண்டுவரப்படும். அன்று காலை, 5:00 முதல், இரவு, 10:00 மணிவரை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். மக்கள், இலவசமாக சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.