பழநி, பழநி முருகன் கோயில் ’ரோப்கார்’ மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (ஜூன் 8ல்) ஒருநாள் நிறுத்தப்படுகிறது.பழநி முருகன் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக சென்று, வரும் வகையில் நாள்தோறும் ’ரோப்கார்’ இயக்கப்படுகிறது. இதில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியில் உருளைகள், கம்பிவடக்கயிறு, பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இடுகின்றனர். பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடக்கிறது. அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் ’ரோப்கார்’ ஜூன் 9 முதல் வழக்கம்போல் இயக்கப்படும், என இணைஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.