நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகமும் கால பைரவருக்கு 108 சங்காபிஷேகமும், பால், தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேக, தீபாராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு நடந்த யாகத்தில் 108 ஹோம திரவியங்களால் பூஜை செய்யப்பட்டு, 21 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 9:00 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடந்தது.