செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா நாளை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணிக்கு விக்னஷே்வரர் அங்குரார்பணம் நடக்க உள்ளது. நாளை காலை 8:00 மணிக்கு கொடியேற்றமும், தொடர்ந்து சாமி சூரிய பிரபையில் புறப்பாடும் நடைபெறுகிறது.இரவு ஹம்சவாகனத்திலும், 10ம் தேதி சிம்ம வாகனத்திலும், 11 ம் தேதி சிறிய திருவடி என்கிற அனுமந்த வாகனத்திலும், 12ம் தேதி சஷே வாகனத்திலும், 13ம் தேதி பெரிய திருவடி என்கிற கருட சேவையும், 14ம் தேதி யானை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்க உள்ளது.மேலும் 15ம் தேதி காலை 8:00 மணிக்கு முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து 16ம் தேதி குதிரை வாகனத்திலும், 17 ம் தேதி சந்திரபிரபையிலும் சாமி ஊர்வலமும், 18 ம் தேதி துவாதச ஆராதனமும் நடக்க உள்ளது.