வல்லநாடு கோசாலை தொட்டியில் ராமர் பாதம் பட்ட அதிசய மிதக்கும் கல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2012 11:01
வல்லநாடு :ராமர் பாதம் பட்ட அதிசய மிதக்கும் கல் வல்லநாட்டிலுள்ள கோ சாலையில் உள்ள தொட்டியில் மிதக்க விடப்பட்டது. ராம பிரானின் ராம சேது இலங்கைக்கு ராவணனை வதம் செய்ய செல்லும் போது தன்னுடன் அழைத்து சென்ற வானர சேனைகளின் வீர பராக்கிராமங்களால் ஏற்படுத்தப்பட்டது ராமர் பாலம் அந்த ராமர் பாதம் பட்ட கல் வரவழைக்கப்பட்டு வல்லநாடு திருமூலநாதர் ஆவுடையம்மாள் சமேதர் கோயிலிலிருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோ சாலையில் உள்ள தொட்டியில் மிதக்க விடப்பட்டது. இந்த அதிசய ராமர் பாதம் பட்ட மிதக்கும் கல் பிரதி வெள்ளிக்கிழமை அன்று கோ பூஜையின் போது மிதக்க விடப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் காமாட்சி மண்டலி டிரஸ்ட் நிர்வாகி நாராயணன், விஸ்வ இந்து பரிஷத் உப தலைவர் சங்கரபாண்டியன், சாஸ்தா, வசந்த், சங்கரலிங்கம், பரமசிவம், கவுன்சிலர் விஜய உடையார், கருங்குளம் யூனியன் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் தங்கராஜ் வல்லநாடு விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி சுப்பையாபாண்டியன், குமார், சொக்கலிங்கம் கோசாலை மேலாளர் சொக்கமணி, விஸ்வ இந்து பரிஷத் மாணவரணியினர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.