ஷீரடி சாய்பாபா பாதுகை, 9 நாணயம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பதிவு செய்த நாள்
11
ஜூன் 2018 11:06
சேலம்: சேலத்தில், சாய்பாபா பாதுகை, ஒன்பது நாணயங்களை, திரளான பக்தர்கள் தரிசித்தனர். ஷீரடி சாய்பாபா, மூன்று பாதுகைகளை பயன்படுத்தினார். அவரது சீடர்களிடம், இரண்டு வழங்கப்பட்டது. மற்றொன்று ஷீரடி யில் உள்ளது. தினமும் உணவு வழங்கிய லட்சுமிபாய்க்கு, பாபா இறக்கும் முன், தன்னிடமிருந்த ஒன்பது நாணயங்களை வழங்கினார். அது, ஷீரடியில் உள்ளது. அவற்றை, சேலம் ஷீரடி சாய் நண்பர்கள் குழுவினர், ஐந்தாம் ஆண்டாக, சாரதா கல்லூரி சாலையிலுள்ள, தெய்வீகம் மண்டபத்துக்கு கொண்டு வந்தனர்.
நேற்று காலை முதல், பாதுகை, உருவச்சிலைக்கு சிறப்பு அபி?ஷகம், ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பெண்கள், பாபாவின் மூல மந்திரத்தை ஜபித்தனர். கூட்டு பிரார்த்தனை, 100 கிலோ அன்னத்தில், அன்னலிங்கம் வடிவமைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பின், லிங்கத்திலிருந்து, அன்னம் எடுத்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பாதுகை, நாணயங்களை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாபாவின் உருவம் பதித்த டாலர், பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
|