நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம்: சிதம்பரத்தில் நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2018 01:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் நாளை 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனையொட்டி நடராஜர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி இன்றும் நடக்கிறது. நாளை அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையை தொடர்ந்து ் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து கொடிமரம் முன்பு எழுந்தருளி காலை 6:30 மணிக்கு கொடிேயற்ற உற்சவம் நடக்கிறது. இதனை உற்சவ ஆச்சாரியார் சந்திரசேகர தீட்சிதர் செய்கிறார்.
உற்சவத்தில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு தினம் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடக்கிறது. காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சுவாமி அம்பாள் சிறப்பு வாகனத்தில் புறப்பாடு வீதிஉலா நடக்கிறது. வரும் 16ம் தேதி தெருவடைச்சான், 20ம் தேதி நடராஜர் தேரோட்டம், 21ம் தேதி பகல் 2:00 மணிக்கு ஆனித் திருமஞ்சன தரிசனம், சித்சபை பிரவேசம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சபாநாயகர் கோவில் பொதுதீட்சிதர்கள் கட்டளைத்தாரர்கள் செய்கின்றனர்.