பதிவு செய்த நாள்
19
ஜூன்
2018
03:06
* ஜூன் 16 ஆனி 2: சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் சிவன் ரிஷப சேவை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம். குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை.
*ஜூன் 17 ஆனி 3: முகூர்த்த நாள். கதலி கவுரி விரதம். சதுர்த்தி விரதம். புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் சிவன், திருமயம் சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் மாவட்டம் மிலட்டூர் விநாயகர், நாகை மாவட்டம் தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் எழுந்தருளல்.
* ஜூன் 18 ஆனி 4: மாணிக்கவாசகர் குருபூஜை. சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனர் கோலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருமஞ்சனம். சிவகங்கை மாவட்டம் கானாடு காத்தான், திருக்கோலக்குடி, கண்டதேவி சிவன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம்.
* ஜூன் 19 ஆனி 5: சஷ்டி விரதம். அமர்நீதி நாயனார் குருபூஜை. மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் களில் ஊஞ்சல் உற்ஸவம் ஆரம்பம். நெல்லையப்பர் தங்கப் பூங்கோவில் வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* ஜூன் 20 ஆனி 6: ஆனி உத்திர அபிஷேகம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடராஜர் அன்னாபிஷேகம். நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனம், சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், சிதம்பரம் ஆவுடையார் கோயில் சிவன் தேர், கரிநாள்
* ஜூன் 21 ஆனி 7: ஆனி உத்திர தரிசனம். நெல்லையப்பர் பூதவாகனம், அம்மன் சிம்ம வாகனம். மதுரை மீனாட்சி அம்மன் திருப்பரங்குன்றம் முருகன் ஊஞ்சல் காட்சி. சாத்தூர் வெங்கடேச பெருமாள் எழுந்தருளல். ராஜபாளையம் பெத்தவநல்லூர் மயூரநாத சுவாமி புறப்பாடு.
* ஜூன் 22 ஆனி 8: திருவாழி ஆழ்வான் திருநட்சத்திரம். சுதர்சன ஜெயந்தி. மதுராந்தகம் கோதண்டராமர் உற்ஸவம் ஆரம்பம். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான், திருக்கோலக்குடி, கண்டதேவி சிவன் கோயில்களில் திருக்கல்யாணம், நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ரிஷப வாகனம்.