ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை நாளை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு காலை 4 மணி முதல் 5 வரை ஸ்படிலிங்க அபிஷேக பூஜை நடக்கிறது. பின் காலை 6.30 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் மற்றும் ராமர், சீதை, பஞ்சமூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருள தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 7 மணிக்கு அக்னிதீர்த்த கடற்கரையிலிருந்து சுவாமி, அம்பாள் புறப்பாடாகி வீதிஉலா நடக்கிறது. தொடர்ந்து ராமர், சீதை மற்றும் லெட்சுமணர் வெள்ளித்தேரில் உலா நடக்கிறது. இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும், என கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.