பதிவு செய்த நாள்
21
ஜன
2012
10:01
பழநி : பழநி மலைக்கோயில் இரண்டாவது "ரோப் கார் பணி சர்வே யுடன் முடங்கியுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பக்தர்கள் மலைக்கோயில் செல்ல, ஏழு ஆண்டுகளுக்கு முன்வரை, மின்இழுவை ரயில் (விஞ்ச்) வசதி மட்டுமே இருந்தது. கடந்த 2004 ல், நான்கு கோடி ரூபாய் மதிப்பில் ரோப்கார் அமைக்கப்பட்டது. 700 மீட்டர் நீளமுள்ள இரும்பு கயிறு, மேல் தள கவுண்டர் "வெயிட் ரோப் , "ரோப் பைண்டிங் மெஷின் ஆகியவை அவ்வப்போது பராமரிப்பதுடன் சரி. இதில் பெட்டிக்கு நான்கு பேர் வீதம் அமர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, எட்டு பெட்டிகளாக குறைக்கப்பட்டது. கார்த்திகை முதல் வைகாசி வரையிலான விழாக்காலத்தில், பெட்டிகளின் எண்ணிக்கை போதுமானாக இல்லை. எனவே, ஆறரை கோடி ரூபாய் மதிப்பில், மேலும் ஒரு "ரோப் கார் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தற்போதைய "ரோப் கார் வலதுபுறம், கொல்கத்தா தாமோதர் ரோப்வே லிöமிடெட் நிறுவனத்தால் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பெட்டிக்கு எட்டு பேர் அமர்ந்து, பெட்டிகள் "சிக் சாக் முறையில் புது ரோப் கார் அமைக்க திட்டமிட்டிருந்தனர். இரண்டு ஆண்டுகளான போதும், அடுத்தகட்ட பணிகள் துவங்கவில்லை. கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், டெண்டர் விடுவதில் நடைமுறைச் சிக்கல்களாகல் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.