பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
12:06
பெரியகுளம், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு , நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற் றார். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட நுாற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். 2013ல் ஐந்துநிலை ராஜகோபுரம் கட்டுமானப்பணியுடன் திருப்பணி துவங்கியது. ராஜகோபுரம் கட்டுமானப்பணி முடிந்துள்ள நிலையில் அறம்வளர்த்தநாயகி, ராஜேந்திரசோழீஸ்வரர், சண்முகர், வள்ளி- -தெய்வானை சன்னதிகளுக்கு எதிராக புதிதாக மூன்று கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட் டது. யாகசாலை பூஜை துவக்கம்: கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதவை , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். அதில் முதலில் யானை, பசு, குதிரை சென்றபிறகு, பக்தர்கள் சென்றனர். யாகசாலையில் கோபுர கலசங்களுக்கு நடந்த பூஜையில் துணை முதல்வர், ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம், கைலாசநாதர் கோயில் அன்பர் பணி பராமரிப்புக்குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் மற்றும் பக்தர்கள்பங்கேற்றனர். மஹா கணபதி ேஹாமம், தனபூஜை, கோ பூஜை நடந்தது. ராஜகோபுரம், அறம்வளர்த்தநாயகி, ராஜேந்திரசோழீஸ்வரர், சண்முகர், வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு கோபுரம் கலசம் வைக்கப்பட்டு பூஜை நடந்தது. ஜூன் 25 காலை 9:05 மணி முதல் 9:25 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.