உத்தமபாளையம், உத்தமபாளையம் வடக்குத் தெருவில் உள்ளது அங்காள ஈஸ்வரி கோயில். அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையானது. சேதமடைந்திருந்த இக்கோயிலில் பக்தர்கள், அறநிலையத்துறையால் திருப்பணி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக கும்பாபிஷேக யாகபூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை முதல் 108 கலசங்களில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் , அம்மன் முன் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காலை 10.07 மணிக்கு கோபுர கலசங்களில் கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த திலீபன் நாராயணன் நம்பூதிரி தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். செயல்அலுவலர் செந்தில்குமார், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.