மீனாட்சிசொக்கநாதர் திருக்கல்யாணம் தினமலர் செய்தி எதிரொலி: பக்தர்கள் காண வாய்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2018 11:06
அருப்புக்கோட்டை: பக்தர்கள் காண வாய்ப்பில்லாமல் மண்டபத்தில் அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கும். தினமலர் செய்தி எதிரொலியாக, எல்லோரும் காணும் வகையில் திறந்தவெளியில் இன்று திருக்கல்யாணம் நடக்க உள்ளது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், அறநிலையதுறையை சேர்ந்த மீனாட்சி-சொக்கநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி பிரமோற்ஸவவிழா 14 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டுவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில்,11 ம் நாளான இன்று மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம் மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக,திருக்கல்யாணம் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில், முக்கிய வி.ஐ.பி., க்கள் மட்டும் கலந்துகொண்டு கதவுகளை பூட்டி நடக்கும். பக்தர்கள் காணாத முடியாமல் தவித்தனர். இது குறித்து, திறந்தவெளியில் பக்தர்கள் அனைவரும் காணும் வகையில் திருக்கல்யாணம் நடத்த வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் தினமலர் செய்தி வெளியிடும். இந்த முறை நிர்வாகம் சார்பில் திருக்கல்யாணம் கோயில் முன் திறந்தவெளியில், பந்தல் அமைத்து பக்தர்கள் அனைவரும் காணும் வகையில் ஏற்பாடு செய்து உள்ளனர். திருக்கல்யாணத்தை காண, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் போன்று இங்கும் நடப்பது தான் சிறப்பு. மாவட்டத்தில் நகை பறிப்பு அதிகம் நடப்பதால் போதுமான போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை விடுத்து உள்ளனர்.