பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
01:06
விழுப்புரம் : விழுப்புரம் பானாம்பட்டுரோடு, காந்தி நகரில் உள்ள ஸ்ரீகங்கைமுத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 23ம் தேதி அனுக்கிய விக்னஷே்வர பூஜை, பூர்ணாஹூதி, வாஸ்துசாந்தி நடந்தது. மறுநாள், புதிய சிலை கரிகோலம் வருதல், மூலஸ்தான அம்மன் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு, தத்துவார்ச்சனை 96 வகை மூலிகை ேஹாமம், காலை 9:15 மணிக்குமேல், சுந்தரசேகர குருக்கள், மூலவர் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு நிலக்கிழார் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். டாக்டர் சிவராமன், டாக்டர் லட்சுமணன் எம்.பி., முன்னிலை வகித்தனர். இதில், மஹாலக்ஷ்மி குரூப்ஸ் உரிமையாளர் ரமஷே், டவுன் டி.எஸ்.பி., சங்கர், தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன், முன்னாள் ஒன்றிய சேர்மன் குப்புசாமி, அ.தி.மு.க., மாவட்ட இலக்கிய அணி சுகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் கவுன்சிலர் மணவாளன், வழக்கறிஞர் ராமரமஷே் மற்றும் பானாம்பட்டு ரோடு, காந்தி நகர் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.