பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
01:06
குளித்தலை: கோட்டமேடு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. குளித்தலை அடுத்த வைகைநல்லூர் பஞ்., கோட்டமேடு கிழக்கு தெருவில், புதியதாக கட்டப்பட்ட செல்வவிநாயகர் கோவிலில், நேற்று காலை, 9:30 மணியளவில், சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை கிராம பொது மக்கள், பக்தர்கள், கடம்பன்துறை காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக் குடம் எடுத்து, ஊர்வலம் சென்றனர். பின்னர் நேற்று காலை, கடம் புறப்பாடு, கும்பாபிஷேகம், அபிஷேக ஆராதனை, கோ பூஜை ஆகியன விமரிசையாக நடந்தது. பக்தர்களுக்கு விழாக் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.