மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆடு தலை சரம் குத்தி விளையாடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2018 01:06
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆட்டு கிடா தலை சரம் குத்துதல் நிகழ்ச்சி, கோவில் முன் நேற்றிரவு நடந்தது. நிகழ்ச்சியில், வளையர்பாளையம், பிச்சம்பட்டி கிராம இளைஞர்கள், ஆட்டுக் கிடா தலையை சரத்தில் குத்தி விளையாடினர். இதில், பிச்சம்பட்டியை சேர்ந்த இளைஞர், சரத்தில் குத்தி வெற்றி பெற்றர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாயனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.