Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வி தரும் காயத்ரி! வால்மீகி கோவில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாகதோஷம் நீங்கி திருமணம் நடக்கணுமா!
எழுத்தின் அளவு:
நாகதோஷம் நீங்கி திருமணம் நடக்கணுமா!

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2018
03:06

திருநாவுக்கரசர் பாடிய இந்தப்பாடல் காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர், ஞானப்பூங்கோதை மீது பாடப்பட்டது. ஜாதகத்தில் நாகதோஷம் எனப்படும் ராகு, கேது தோஷம் நீங்கி திருமணயோகம் கைகூட இதைப் பாடலாம். இங்குள்ள அம்பிகை கல்வி தேவதையாக விளங்குவதால் மாணவர்களும் கல்வி விருத்திக்காக படிக்கலாம். அம்பாளின் பெயர் ஒன்பதாம் பாடலில் உள்ளது.

விற்றூண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண்
வியன் கச்சிக் கம்பன்காண் பிச்சை அல்லால்
மற்றூண் ஒன்று இல்லாத மாசதுரன் காண்
மயானத்து மைந்தன் காண் மாசொன்று இல்லாப்
பொற்றூண் காண் மாமணிநற்
குன்றொப்பான்காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கற்றூண் காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காண் அவனென் கண்ணுளானே.

இடிப்பான் காண் என்வினையை ஏகம்பன்காண்
எலும்பா பரணன் காண் எல்லாம் முன்னே
முடிப்பான் காண் மூவுலகும் ஆயினான் காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசுபதன்காண்
பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான்காண்
காளத்தில் யானவனன் கண்ணுளானே.

நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான் காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானே காண் தக்கோர்க்கெல்லாம்
காரணன்காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன்காண் அவனென் கண்ணுளானே.

செற்றான்காண் என்வினையைத் தீயாடிகாண்
திருவொற்றியூரான் காண் சிந்த செய்வார்க்
குற்றான்காண் ஏகம்பம் மேவினான்காண்
உமையாள் நற்கொழுநன்காண் இமையோர் ஏத்தும்
சொற்றான் காண் சோற்றுத் துறையுளான் காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன் காண் அவனேன் கண்ணுளானே.

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தால் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சியுள்ளான்
காளத்தியானவனென் கண்ணுளானே.

எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான்காண்
ஏகம்பம்மேயான்காண் இமையோர் ஏத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கினான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை பூரித்தான்காண்
நல்லவிடை மேல்கொண்டு நாகம் பூண்டு
நளிச்சரமொன் றேத்தியோர் நாணாயற்ற
கல்லாடை மேற்கொண்ட காபாலிகாண்
காளத்தி யானவனென் கண்ணுளானே.

கரியுருவு கண்டத்தெங் கண்ணுளான்கண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன் காண் ஏகம்பன்காண்
எண்டிசையும் தானாய குணத்தினான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயாடி காண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தையான்காண்
கரியுரிவை போர்த்துகந்த சிந்தையான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபாலிகாண்
காளத்தி யானவனென் கண்ணுளானே.

 இல்லாடிச் சில்பலி சென்றேற்கின்றான் காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின்றான் காண்
வில்லாடி வேடனா யோடினான் காண்
வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத்தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவாளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபாலி காண்
காளத்தி யானவனென் கண்ணுளானே.

தேனப்பூ வண்டுண்ட கொன்றையான்காண்
திரு ஏகம்பத்தான் காண் தேனார்ந்து உக்க
ஞானப்பூங் கோதையாள் பாகத்தான் காண்
நம்பன்காண் ஞானத்தொளியானான் காண்
வானப்பேர் ஊருமறிய வோடி
மட்டித்து நின்றான் காண் வண்டார் சோலைக்
கானப்பேரூரான் காண் கறைக்கண் டன்காண்
காளத்தி யானவனென் கண்ணுளானே.

 இறையவன் காண் ஏழுலகும் ஆயினான்காண்
ஏழ்கடலும் சூழ்மலையும் ஆயினான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான்காண்
குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவினான்காண்
மறையுடைய வானோர் பெருமான் தான்காண்
மறைக்காட்டு உறையும் மணிகண் டன் காண்
கறையுடைய கண்டத்தெம் கபாலிகாண்
காளத்தி யானவனென் கண்ணுளானே.

 உண்ணா வருநஞ்ச முண்டான் தான் காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடினான் காண்
பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண்
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளுவான் காண்
கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சியான் காண்
காளத்தி யானவனென் கண்ணுளானே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar