பேசாத பிள்ளைகளை ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்று அடைமொழி கொடுத்து துõற்றுகிறார்கள். ஆனால், அதிகமாக பேசாமல் இருப்பதையே இஸ்லாம் ஆதரிக்கிறது. “வாய்மூடி இருப்பது இஸ்லாத்தில் தலை போன்றதாகும்’ என்று பேச்சைக் குறைக்கும் தன்மைக்கு பெரும் சிறப்பு தரப்பட்டுள்ளது. குறைவாகப் பேசுபவர்களின் வார்த்தைகள் மணிமணியாக, தத்துவார்த்தமானதாக, யதார்த்தமானதாக இருக்கும். அதில் பொறுமை நிறைந்திருக்கும். “நாவின் பத்தினித்தனம் வாய்மூடி இருப்பதாகும்,” என்கிறார் நபிகள் நாயகம். “மவுனமாக இருப்பதால், ஒரு மனிதனுக்கு கிடைக்கும் கண்ணியமானது, அறுபது ஆண்டு வணக்கத்தை விட மேலானது,” என்றும் அவர் சொல்கிறார்.