மரங்களை வெட்டி இயற்கை சூழ்நிலையை அழித்து காசு பார்க்கிறார்கள் சிலர். இவர்கள் இங்கே வேண்டுமானால் மரம் வெட்டி விற்ற பணத்தில் மகிழ்ச்சியைக் காணலாம். ஆனால், இறப்புக்குப்பின் இவர்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டதும் தலைகீழாகக் கட்டித் தொங்க விடப்படுவார்கள். ஏன் தெரியுமா?. மரத்தடியில் மனிதர்களும், கிளைகளில் பறவைகளும் தங்கி இளைப்பாறுவார்கள். பறவைகளின் கூடும் மரத்தில் தான் இருக்கும். நபிகள் நாயகம் இது பற்றிக் கூறும் போது, “மனிதர்களும் மிருகங்களும் தங்கி இளைப்பாறக் கூடிய நிழல் கொடுக்கும் மரத்தின் கிளையை அவசரத்தேவை இல்லாமல் எவன் ஒருவன் வெட்டுவானோ அவனை அல்லாஹ், நரகத்தில் தலைகீழாகத் தொங்க விடுவான்,” என்கிறார். மின்சாரக் கம்பிகளில் மரக்கிளைகள் உரசினாலோ, பிறவகை அத்தியாவசியத் தேவை தவிர மரங்களில் கைவைத்தால், தலை கீழாக தொங்குவது உறுதி. மரம் வெட்டுபவர்கள் மட்டுமல்ல! அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் இந்த தண்டனையை ஏற்க தயாராக இருக்க வேண்டும்.