ஒருவர் நமக்கு துன்பமே செய்தாலும் கூட, அவருக்கெதிரான பாவம் செய்யாமல் சகித்துக் கொள்வது, அந்த துன்பங்களை இறைவனே தந்ததாகக் கருதி பொறுமையாக இருப்பது, இறைவனுக்குரிய கடமைகளான தொழுகை, நோன்பு போன்றவற்றில் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொள்வது, இறைவன் நமக்கு தரும் சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது ஆகிய பண்புகளை இஸ்லாம் வளர்க்கச் சொல்கிறது.