தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2018 12:06
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் வரும் 1ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சேத்தியாத்தோப்பு – கும்பகோணம் சாலை பூதங்குடி கிராம எல்லையில் உள்ள தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 1ம் தேதி காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலில் வர்ணம் பூசுதல், நுழைவு வாயில் கோபுரம், மூலஸ்தானம் புனரமைப்பு, தரை தளத்தில் கிரானைட் கற்கள் பதித்தல், யாகசாலை மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் முடிந்துள்ளது. இப்பணிகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர் பொறியாளர் ஜெயராமன் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.